SATCHITANANDA

Education that shows you inside yourself

Premium WordPress Theme by D5 Creation

Unnai Nee Arivaya

Paravidya

ஞானியும், அஞ்ஞானியும்

ஞானிகள் அஞ்ஞானம்  நீங்கப்பெற்றத்தால், அவர்கள் உறங்கினாலும், கண்விழித்தாலும் சத்து, சித்து, ஆனந்தம் கலந்த அந்த ஜீவ ஜோதியை பொருந்தி இருப்பதால் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை  என்ற மூன்று ஆசைகளிடமும் இவர்கள் பொருந்துவதில்லை. ஆனால், அஞ்ஞானிகள் உறங்கி எழுந்தவுடன் அவர்களிடம் உள்ள அறியாமை (அஞ்ஞானம்) நீங்காததால், அவர்களிடம் இந்த மூன்று ஆசைகளும் உண்டாகின்றது. இன்பமாகவோ, துன்பமாகவோ, நமக்கு விளையும் அனுபவங்களுக்கு ஆதாரமனவற்றை ‘விஷயம்’ என்பர். நாம் இன்ப, துன்பங்களாக அனுபவிக்கும் விஷயங்கள் கணக்கற்றவைகளாக உள்ளன. நாம் பற்று வைக்கின்ற விஷயங்கள், நம்முடைய விருப்பங்கள் எண்ணற்றவைகளாகவும் உள்ளன. ஆசைகள் அனேகம் இருக்க, இந்த மூன்றையும் மட்டும் குறிப்பிடுவது ஏன்? என்றால், எல்லா ஆசைகளும், மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய  இந்த மூன்று ஆசைகளுள் அடங்கிவிடும் என்பதினால்தான்Read More…

ஆத்மநிச்சயம் (பகுதி – 8)

மேலும், விழிப்பு, கனவு, மற்றும் ஆழ்ந்த உறக்கம் என்ற அனுபவத்தின் வாயிலாக, சாக்ஷியாக இருக்கும் மாறுதலில்லாத சைதன்யம் இருக்க வேண்டும் என்று ஊகித்துக்கொள்ளலாமே, இந்த அனுமானத்தை வைத்து ஆத்மாவை அறிந்துக்கொள்ளலாமே? இதற்கு சாஸ்திரப் பிரமாணத்தின் அவசியம் என்ன இருக்கின்றது? என்றும் சிலருக்கு சந்தேகம் வரலாம். இங்கு என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஞானம் என்பது அறிவை அடையும் விசயம். அந்த தெளிந்த அறிவு ஒருவனுக்கு சாஸ்திரத்தின் வாயிலாக மட்டுமே உண்டாக முடியும், அது அனுமானத்தினால் உண்டாக முடியாது. ஆழந்த உறக்கத்தில் இருந்து ஒருவன் விழிப்படைந்தவுடன் மீண்டும் அவனிடம் அறியாமை ஒட்டிக்கொள்ளும், அதனால், அவனுக்கு அனுமானத்தின் வாயிலாக ஸ்வயம் பிரகாசமான ஆத்மா ஒன்று இருக்கின்றது என்ற அறிவு இருக்கலாம். ஆனால், சந்தேகமில்லாத ஆத்மாவின்Read More…

வேதாந்த ஸாரம் – 8

அத்யாரோபம் – விளக்கம் அத்வைத வேதாந்தத்தில் ‘அத்யாரோபம்’ என்பது மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இதனை ‘அத்யாஸம்’ என்றும் அழைக்கப்படுகின்றது. இதனை மற்றொரு உதாரணத்தின் வாயிலாக காணலாம். ஒரு நதிக்கரை ஓரத்தில் மங்கலான நீரில் வெள்ளி நாணயங்கள் சிதறிக்கிடப்பதாக நினைத்து, அதன் அருகே சென்று அதனை கையில் எடுத்துப் பார்த்தால் அது வெள்ளி நாணயம் போன்ற ஒளிரும் தன்மை பெற்றுள்ள முத்துச் சிப்பிக்கள் என்று தெரியவருகின்றது. இவ்வாறு, முத்துச்சிப்பியின் மீது வெள்ளி அத்யாஸம் ஆகின்றது. இதனையே உள்ள வஸ்துவில் இல்லாத ஒன்றை ஏற்றிப்பார்த்தல் என்கின்றோம். இதனையே வேதாந்தத்தில் பிரம்மத்தின் மீது இந்த உலகத்தை உண்மை என்று ஏற்றிப் பார்க்கிறோம். இதனை “அத்யாரோபம்” என்று 32 – வது ஸ்லோகத்தில் குறிப்பிடுகின்றார். அடுத்து 33Read More…

ஆத்மநிச்சயம் (பகுதி – 7)

உண்மையில், ஜீவாத்மாவே பரமாத்மாதான். ஆனால், இதை உணராதவனுக்கு ‘துவம்’ என்ற பதத்திற்கு விளக்கம் தெரிந்து கொள்ளாமல் சரீரத்தையே ஆத்மா என்று எண்ணுகின்றான். இவன் பரமாத்மாவை மற்ற வஸ்துக்களைப் போன்று தனக்கு வேறானதாகவும், சரீரத்தினால் அறியப்பட வேண்டியது போலவும் எண்ணுகின்றான். ஆத்மா இவனுக்கு பிரத்யக்ஷமாக தோன்றுவதில்லை. அனாத்மாவான சரீரம்தான் பிரத்யக்ஷமாக தோன்றுகின்றது. இது எப்படியென்றால், மஞ்சள்காமாலை வந்தவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் நிறமாகக் காணப்படுகின்றது. ஆனால், இவன் காணும் வஸ்துக்கள் மஞ்சள் நிறத்தில் இல்லை. அது இவனது கண்ணின் குறைபாடாகும். அதுபோன்று, இவனுக்கு தன்னுள் இருக்கும் சைதன்யம் எங்கோ வெளியில் இருப்பது போன்று தெரிகின்றது. மோக்ஷம் அடைய விரும்புபவனுக்கு ஆத்மா, அனாத்மா இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாச அறிவும், வேத வாக்கியமும் சேர்ந்துதான் ஞானத்தைக் கொடுக்கும். ஆத்ம,Read More…

வேதாந்த ஸாரம் – 7

குருவின் அவசியம் ஒருவனுடைய தலையில் நெருப்பு பிடித்துக்கொண்டவுடன், அவன் அதை அணைக்க எப்படி அருகே இருக்கும் நீரை நோக்கி ஓடுவானோ, அதுப்போல, பிறப்பு, இறப்பு என்ற சம்ஸார நெருப்பினால் கொதிப்படைந்தவன், அந்த நெருப்பை அணைக்க பிரம்ம நிஷ்டனாக விளங்கும் குருவைச் சென்று சரணடைகின்றான். அந்த குருவிற்கு கொடுப்பதற்கு தன்னிடம் ஒன்றுமில்லாவிட்டாலும், அவருக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற சாஸ்திர நியதி இருப்பதினால், அன்றைய உபநிஷத்து காலத்தில் வாழ்ந்த ரிஷிகள் அனைவருமே குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததினால், அக்னி காரியங்களில் ஈடுபட்டு வந்தனர். அதனால், அவர்களது யாகத்திற்குக் கொடுக்க ஸமித்து என்ற குச்சிகளை கொண்டு காணிக்கையாக கொடுத்தாவது இந்த வேதாந்த சாஸ்திரத்தை அறிந்துகொண்டனர். இப்படி குருவைத்தேடி சாஸ்திரத்தை அறிந்து மோக்ஷத்தை விரும்புகின்றவனே “முமுக்ஷு” அல்லதி “ஜிக்ஞாஸு”Read More…

ஆத்மநிச்சயம் (பகுதி – 6)

இவ்வாறு, வேதாந்தத்தின் சித்தாந்தத்தில் இரண்டு முடிவான விசயங்கள் உள்ளன. அவைகள், 1. ஆத்மா, 2. அனாத்மா என்பனவாகும். இதில், ஆத்ம, ஆனாத்ம பேதத்தை மட்டும் அறிந்தால் போதாது, ஆத்மாவைத் தவிர மற்ற அனாத்மாக்கள் அனைத்துமே உண்மையல்ல. அவை கற்பிக்கப்பட்டவைகள் என்ற ஞானம் அவசியம். ஆத்மா மட்டுமே சத்தியம் என்ற அத்வைத ஞானமும் உண்டாக வேண்டும். இதைத்தான் வேதத்தின் மஹாவாக்கியங்கள் உண்டு பண்ணுகின்றன. இதிலே சாங்கியர்கள் அனாத்மாவான இந்த பிரக்ருதியை மித்யா என்று ஒப்புக்கொள்வதில்லை. அவர்களது இந்த அஞ்ஞானம் அவர்களை பிரம்மத்தை அறிய தடையாக உள்ளது. இந்த ஆத்மா, அனத்மா என்ற இரண்டில் அஞ்ஞானம் (அறியாமை) எதனுடன் சேர்ந்தது என்று பார்த்தால், பெரும்பாலனவர்களின் நினைப்பு “அறியாமையே அறியாமைக்குக் காரணம்” என்பதாகும். ஆனால், இங்கு ஒருRead More…

வேதாந்த ஸாரம் – 6

26 – வது ஸ்லோகத்தில் அமைதியுடையவனாகவும், புலன்களை அடக்கியவனும், குற்றங்கள் அற்றவனும், கூறுவதைப் போன்றே நடப்பவனும், குண்ங்கள் நிறைந்தவனும், எப்பொழுதும் குருவை அனுசரித்து நடப்பவனுமாகிய இத்தகைய சீடன் கிடைத்தான் என்றால், அவனுக்கு ஆத்ம ஞானத்தை உபதேசம் செய்ய வேண்டும் என்பது குருவிற்கு பொருந்தும் நியமம் ஆகும். ஆசார்ய ஸ்யாபி அயம் நியமோ யன்ன்யாயப்ராப்த சச்சிஷ்ய நிஸ்தாரணம் அவித்யா மஹோததே: | நியமங்களுக்குப் பொருத்தமானதாக, தன்னிடம் வந்துள்ள நல்ல, தகுந்த சீடனை, அஞ்ஞானக் கடலைக் கடக்க வைப்பது என்பது ஆச்சாரியருக்கும் நியமமாக உள்ளது என்று ஸ்ரீ சங்கரர் முண்டக உபநிஷத்திற்கு எழுதியுள்ள விளக்க உரையில் கூறியுள்ளார். அடுத்ததாக, விஷயத்தைப் பற்றி 27 – வது ஸ்லோகத்தில் ஜீவனும், பிரம்மமும் ஒன்று என்பதுதான் “விஷயம்” ஆகும்.Read More…

ஆத்மநிச்சயம் (பகுதி – 5)

ஜீவனும், பிரம்மமும் ஒன்றென்றால், ஜீவனிடத்தில் காணப்படுகின்ற சுக, துக்கங்கள் ஆத்மாவைப் பாதிக்காதா? என்றால், அந்த ஆத்மாவுக்கு இதில் எதுவுமே சம்பந்தம் கிடையாது. உதாரணமாக, ஆகாயத்தை நீல நிறமாக எண்ணுகின்றான். ஆனால், உண்மையில் ஆகாயத்திற்கு நிறமில்லை. அதுப்போல, இவனுக்கு வருகின்ற சுக, துக்கங்கள் இவனை பாதிப்பதாக எண்ணுவதினால், அவ்வாறு தோன்றுகின்றது. அதனால், இவனது கற்பனையான நீல நிறம் எப்படி ஆகாயத்தைப் பாதிக்காதோ, அதுப்போல, இவனது, சுக, துக்கங்கள் ஆத்மாவைப் பாதிக்காது. இதுபோன்ற மனதில் தோன்றும் தேவையற்ற கற்பனைகளால், இவனது அந்தக்கரணம் ஆத்மா ஆகிவிடமுடியாது. இவ்வாறு அந்தக்கரணத்தின் வாயிலாக பார்க்கப்படும் வஸ்துவக்கும் (உலகத்துக்கும்), ஆத்மாவுக்கும் அறியப்படுகின்ற சம்பந்தம் ஏற்படுகின்றது. வஸ்துவிடத்தில் தோன்றும் சைதன்யம் அந்தக்கரணத்தின் மூலம் சம்பந்தப்படுவதால், நான் இதை அறிகின்றேன், பார்க்கின்றேன் என்ற எண்ணம்Read More…

வேதாந்த ஸாரம் – 5

செய்யுள் 15 முதல் 25 வரை நான்கு விதமான சாதனங்கள், மற்றும் அதன் வாயிலாக வளர்த்துக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் எத்தகையவை என்றும், அந்த நற்பண்புகளால் அடையும் பலன்களையும் காணலாம். நித்யாநித்ய வஸ்து விவேக: | இஹாமுத்ரார்த பலபோகவிராக: | சமாதிஷட்க ஸம்பத்தி: | முமுக்ஷுத்வம் சேதி | போன்ற நான்கு சாதனங்கள் ஆகும். இதில், விவேகம் என்பது (நித்யாநித்ய வஸ்து விவேக:) எது நித்யம்?, எது அநித்யம்? என்ற அறிவினை அறிதல், அதாவது இந்த உலகத்தில் எந்தப் பொருளும் நித்தியமாக இருப்பதில்லை, எல்லோரும் அழிந்து போகின்ற அநித்திய பொருளின் மீதே ஆசை வைக்கின்றனர்.  நித்தியமான, என்றும் அழியாத அந்த பரம்பொருளை யாரும் விரும்புவதில்லை. இதற்கு காரணம் மனிதனின் மனதில் உள்ள விருப்பு,Read More…

ஆத்மநிச்சயம் (பகுதி – 4)

நேரடியாக மோக்ஷத்தை கர்மாவினால் கொடுக்க முடியாது. ஞானம் உண்டாகுவதற்கு உபயோகமான சூழ் நிலைகளை வேண்டுமானாலும் கர்மா உண்டாக்க முடியும். எனென்றால், உண்டுபண்ணுதல், அடைதல், தூய்மைப்படுத்துதல், மாறுபாடு செய்தல் போன்ற எந்த கர்மாக்களினாலும் மோக்ஷம் சித்திக்காது. அதனால், மோக்ஷத்திற்கு கர்மா சாதனமல்ல என்பது நிச்சயம். இதுவரை கர்மா தானாகவே மோக்ஷத்தை கொடுக்காது என்று அறிந்தோம், இனி கர்மா ஞானத்துடன் சேர்ந்து மோக்ஷத்தை உண்டாக்குமா? இதிக் கர்மாவினால் சித்த சுத்தி உண்டாகி, அதன் வாயிலாக அவன் ஞானத்த அடைய தக்க சூழ்நிலை உண்டாகி, அவன் கர்மா செய்ததினாலோ, அல்லது கர்மாவை விட்டதினாலோ ஞானம் சித்தியாகின்றது என்றவுடன், கர்மா முடிந்த பின்புதான் இது உண்டாகும். ஆக, மோக்ஷத்தை அளிப்பதில் இரண்டும் சமமான சாதனமாக இருக்கலாமா என்றால், அதுவும்Read More…